சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையான் படத்தின் சிறப்பம்சம் Performance Capture Technology தான். ஒரு உயிரினத்தின் அசைவுகளை பதிவு செய்து அதை அப்படியே வேறு கதாபாத்திரத்திற்கு மாற்றுவது தான் இந்த Performance Capture Technology என்பது.
இந்த யுக்தியைத் தான் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தில் உபயோகிக்கிறார் சௌந்தர்யா. இதற்காக ரஜினியின் அசைவுகளையும் முகபாவங்களையும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் கோச்சடையான் யூனிட்.Performance Capture Technology இந்தியாவிலேயே முதன் முதலில் இந்த படத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது என்று பெருமையுடன் கூறியிருந்தார் சௌந்தர்யா.
ஆனால் கே.வி.ஆன்ந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றானில் Performance Capture Technology உபயோகப்படுத்தியுள்ளனர். சென்னையிலுள்ள VFX மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ்மோகன் Performance Capture Technology உபயோகப்படுத்தி மாற்றான் படத்திற்காக ஒரு காட்சியை எடுக்க உதவியுள்ளார். இதற்காக சூர்யாவின் முகபாவங்களை பதிவு செய்துள்ளனர்.
அப்ப Performance Capture Technology பயன்படுத்தி வெளியாகும் முதல் படம் கோச்சடையான் இல்லையா!
No comments:
Post a Comment